Showing posts with label midhunam. Show all posts
Showing posts with label midhunam. Show all posts

Wednesday, April 13, 2016

தமிழ் புத்தாண்டு மிதுனம்ராசி பலன்கள் 2016



நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். விலைவாசி ஏறிக்கிட்டே போகுது; வாடகையும் தாறுமாறா கூடிக்கிட்டே போகுது. புறநகர் பகுதியிலாவது அரை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் வாங்கினா பத்து வருஷம் கழித்து வீடு கட்டிக்கிட்டு செட்டிலாகி விடலாம் என்று யோசிப்பீர்கள். கௌரவப் பதவி, புது பொறுப்புகள் தேடி வரும். 

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். உங்கள் ராசியிலேயே இந்த துர்முகி வருடம் பிறப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. தோலில் நமைச்சல், தேமல், நரம்புச் சுளுக்கு, சிறுநீர் பாதையில் அழற்சி வரக்கூடும். இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். செவ்வாய் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும். வீடு, மனை வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். 

ராகு 3ம் வீட்டிலேயே இந்த வருடம் முழுக்க முகாமிட்டிருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். பழைய பிரச்னைகளை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். மாற்று மதம், மொழி, மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். ஆனால், கேது 9ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் தந்தையாருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்து போகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். 

சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். 26.10.2016 முதல் 2.12.2016 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8ல் அமர்வதால் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சகோதர வகையில் மனத்தாங்கல், சின்ன சின்ன ஏமாற்றங்கள், பழைய கடனை நினைத்த கவலைகளெல்லாம் வந்துச் செல்லும். மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள். 14.10.2016 முதல் 7.11.2016 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுது, சளித் தொந்தரவு, லேசான தலை வலி, கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள், பிள்ளைகளால் செலவுகளெல்லாம் வந்து போகும். 1.8.2016 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். 

வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என சரி பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு ராசிக்கு 4ல் நுழைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். தாயாருக்கு படபடப்பு, ரத்த அழுத்தம், பித்தப் பையில் கல், காலில் அடிபடுதல் வந்து போகும். அவருடன் விவாதங்களும் வரக்கூடும். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 

சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். வீட்டில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது நகை, பத்திரங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்வது நல்லது. சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஆனால் 17.1.2017 முதல் 09.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 5ல் அமர்வதால் குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் இனி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். கட்டுமானப் பொருட்கள், பெட்ரோ-கெமிக்கல், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். 

சித்திரை, ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவார்கள். இந்தாண்டு முழுக்க குரு சாதகமாக இல்லாததால் உத்யோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

கன்னிப் பெண்களே!
 காதல் வேறு, நட்பு வேறு என்பதை உணருவீர்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். 

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். கடினமாக உழைத்து உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஒத்துழைப்புடன் விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். 

அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். ராஜதந்திரத்தால் முன்னேறுவீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களின் ஆதரவால் சில முக்கிய வேலைகளை முடிப்பீர்கள்.

கலைத்துறையினரே
! முடங்கிக் கிடந்த நீங்கள் முன்னேறுவீர்கள். உங்களின் கற்பனை விரியும். புகழ் பெற்ற நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும்.

விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இந்த தமிழ்ப் புத்தாண்டு எதிர்நீச்சல் போட வைத்தாலும், சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும். 

பரிகாரம்: சென்னை - திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ராகவேந்திரர் ஆலயத்தை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.

Also Read



தமிழ் புத்தாண்டு ரிஷபம் ராசி பலன்கள் 2016

ரிஷபம்

எடுத்த முடிவில் பின்வாங்காத நேர்மையாளர்களான நீங்கள், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்பவர்கள். மற்றவர்களின் ரகசியங்களை கட்டிக்காப்பவர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் இந்த துர்முகி ஆண்டு பிறப்பதால் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஆடி, ஆவணி மாதத்தில் இழுபறியாக இருந்த அரசு காரியம் முடியும். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள். 9.9.2016 முதல் 25.10.2016 வரை உங்களின் விரைய&சப்தமாதிபதியான செவ்வாய் 8ல் மறைவதாலும், 19.9.2016 முதல் 13.10.2016 வரை உங்களின் ராசிநாதனான சுக்கிரன் 6ல் மறைவதாலும் முன்கோபம், வீண் அலைச்சல், தொண்டை வலி, சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சச்சரவுகள், வழக்கால் நிம்மதியின்மை, கணவன்-மனைவிக்குள் விவாதங்கள், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து போகும்.

இந்தாண்டு முழுக்க ராகு 4ம் இடத்திலும், கேது 10லும் தொடர்வதால் சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் அரசாங்கத்திற்கு கால தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொத்தை விற்பதாக இருந்தால் ஒரே தவணையில் பணம் வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வது நல்லது. தாயாருக்கு அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம் வந்துச் செல்லும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். அவர் உங்களை கோபத்தில் ஏதேனும் பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அலைச்சலும் இருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவில் பழங்கள், காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். இடப்பெயர்ச்சி உண்டு. வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவுகள் ஏற்படும். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டி வரும். 1.8.2016 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் 4ல் அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்து கொண்டேயிருக்கும். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக அனுகுவது நல்லது.

தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்துகள் வந்து நீங்கும். சிலர் சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5ல் நுழைவதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்கள் மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். எங்கேயோ காட்ட வேண்டிய கோபத்தை அடக்கி வைத்திருந்ததை குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வீசி வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள்.

இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால் முன்கோபம் அதிகமாகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்தவரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டால் நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. நீ இப்படி பேசுவதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லையே. உன்னை யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றெல்லாம் மனைவியுடன் எதிர்வாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்ல வேண்டாம். முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும்.
 
வியாபாரத்தில்
 ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து செயல்படப்பாருங்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். மற்றவர்களை நம்பி அனுபமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக மற்றும் கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு முன்பாக வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. இந்தாண்டு முழுக்க கேது 10ல் தொடர்வதால் உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரி உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். ஆடி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே!
 தடைப்பட்ட உயர்கல்வியை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வருடத்தின் இறுதியில் கல்யாணம் முடியும். ஃபேஸ் புக், டிவிட்டரை எல்லாம் கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சி செய்வார்கள். தாயாரை தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம். அல்சர், யூரினரி இன்ஃபெக்ஷன், முகப்பரு வந்துச் செல்லும்.

மாணவ-மாணவியர்களே! 
விளையாட்டைக் குறையுங்கள். தொடக்கத்திலிருந்தே படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சிலரின் சிபாரிசு அல்லது அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் இறங்காதீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும்.

கலைத்துறையினரே!
 வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும். 

விவசாயிகளே!
 
வற்றிய கிணறு சுரக்கும். புதிய சாகுபடி திட்டத்தில் சேர்ந்து மாற்று பயிர்களால் ஆதாயமடைவீர்கள். அவ்வப்போது பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். இந்த தமிழ் புத்தாண்டு கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.

பரிகாரம்: 
வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் விநாயகரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.


Also Read