Showing posts with label தமிழ் புத்தாண்டு ராசிபலன். Show all posts
Showing posts with label தமிழ் புத்தாண்டு ராசிபலன். Show all posts

Wednesday, April 13, 2016

தமிழ் புத்தாண்டு ரிஷபம் ராசி பலன்கள் 2016

ரிஷபம்

எடுத்த முடிவில் பின்வாங்காத நேர்மையாளர்களான நீங்கள், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்பவர்கள். மற்றவர்களின் ரகசியங்களை கட்டிக்காப்பவர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் இந்த துர்முகி ஆண்டு பிறப்பதால் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஆடி, ஆவணி மாதத்தில் இழுபறியாக இருந்த அரசு காரியம் முடியும். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள். 9.9.2016 முதல் 25.10.2016 வரை உங்களின் விரைய&சப்தமாதிபதியான செவ்வாய் 8ல் மறைவதாலும், 19.9.2016 முதல் 13.10.2016 வரை உங்களின் ராசிநாதனான சுக்கிரன் 6ல் மறைவதாலும் முன்கோபம், வீண் அலைச்சல், தொண்டை வலி, சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சச்சரவுகள், வழக்கால் நிம்மதியின்மை, கணவன்-மனைவிக்குள் விவாதங்கள், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து போகும்.

இந்தாண்டு முழுக்க ராகு 4ம் இடத்திலும், கேது 10லும் தொடர்வதால் சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் அரசாங்கத்திற்கு கால தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொத்தை விற்பதாக இருந்தால் ஒரே தவணையில் பணம் வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வது நல்லது. தாயாருக்கு அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம் வந்துச் செல்லும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். அவர் உங்களை கோபத்தில் ஏதேனும் பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அலைச்சலும் இருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவில் பழங்கள், காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். இடப்பெயர்ச்சி உண்டு. வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவுகள் ஏற்படும். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டி வரும். 1.8.2016 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் 4ல் அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்து கொண்டேயிருக்கும். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக அனுகுவது நல்லது.

தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்துகள் வந்து நீங்கும். சிலர் சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5ல் நுழைவதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்கள் மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். எங்கேயோ காட்ட வேண்டிய கோபத்தை அடக்கி வைத்திருந்ததை குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வீசி வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள்.

இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால் முன்கோபம் அதிகமாகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்தவரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டால் நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. நீ இப்படி பேசுவதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லையே. உன்னை யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றெல்லாம் மனைவியுடன் எதிர்வாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்ல வேண்டாம். முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும்.
 
வியாபாரத்தில்
 ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து செயல்படப்பாருங்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். மற்றவர்களை நம்பி அனுபமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக மற்றும் கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு முன்பாக வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. இந்தாண்டு முழுக்க கேது 10ல் தொடர்வதால் உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரி உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். ஆடி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே!
 தடைப்பட்ட உயர்கல்வியை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வருடத்தின் இறுதியில் கல்யாணம் முடியும். ஃபேஸ் புக், டிவிட்டரை எல்லாம் கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சி செய்வார்கள். தாயாரை தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம். அல்சர், யூரினரி இன்ஃபெக்ஷன், முகப்பரு வந்துச் செல்லும்.

மாணவ-மாணவியர்களே! 
விளையாட்டைக் குறையுங்கள். தொடக்கத்திலிருந்தே படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சிலரின் சிபாரிசு அல்லது அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் இறங்காதீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும்.

கலைத்துறையினரே!
 வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும். 

விவசாயிகளே!
 
வற்றிய கிணறு சுரக்கும். புதிய சாகுபடி திட்டத்தில் சேர்ந்து மாற்று பயிர்களால் ஆதாயமடைவீர்கள். அவ்வப்போது பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். இந்த தமிழ் புத்தாண்டு கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.

பரிகாரம்: 
வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் விநாயகரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.


Also Read




தமிழ் புத்தாண்டு மேஷராசி பலன்கள் 2016

மேஷம்

பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள்.உதவும் குணம் கொண்ட நீங்கள்,பலரின் நம்பகத்தன்மையைப் பெற்றிறுருப்பீர்கள். இந்த துர்முகி ஆண்டுபிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய்8-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்பெரிய திட்டங்களெல்லாம் நிறைவேறும். பூர்வ புண்யாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சமடைந்திருப்பதுடன், புதனும் உங்கள் ராசியில்அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைப்பட்டு வந்த அரசாங்க விஷயங்கள்நல்ல விதத்தில் முடியும். புது வாய்ப்புகள் தேடிவரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்தில் சிலமாற்றங்கள் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.நட்பு வட்டம் விரிவடையும். உங்களுடையராசிக்கு 3ம் வீட்டில் சந்திரன்அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

மாதக் கணக்கில், வாரக் கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். மனோ பலம் அதிகரிக்கும்.வருடப் பிறப்பு முதல்ஆவணி மாதம் பிற்பகுதி வரை ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிறுசிறு விபத்துகள், ரத்த சோகை, முன்கோபம்,வீண் பகை, சகோதர வகையில்செலவுகள் வந்துச் செல்லும். வீடு,மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். வருடப்பிறப்பு முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் நிற்பதால் மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 2.8.2016முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல்13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு6ல் மறைவதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர்வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.

இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள்வந்து போகும். எவ்வளவு பணம்வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். திடீர் பயணங்கள் அதிகமாகும்.பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வரக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தங்க ஆபரணங்களை யாருக்கும்இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.உங்களை விட தகுதியில் குறைந்தவர்கள், வயதில் சிறியவர்கள் அல்லது ஒரு காலத்தில்உங்கள் உதவியால் முன்னேறியவர்களில் சிலர் உங்களை மதிக்காமல்போவார்கள். ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும்,வக்ரகதியிலும் ராசிக்கு 7ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால் மறைந்துக்கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல்,குழப்பங்கள் விலகும்.

இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்கு 8ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களைமாற்றிக் கொள்ளப்பாருங்கள். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவிப்பீர்கள். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோஅல்லது உங்களது தவறுகளை சுட்டிக்காட்டினாலோ அதை பொறுமையாக ஏற்றுக்கொள்வது நல்லது. இரவு நேரப்பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிடவேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். வழக்கு வியாஜ்யம் என்றெல்லாம் வீண் செலவுகள் செய்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்காதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.

பணம், திருமண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். அரசுக்குசெலுத்த வேண்டிய வரிகளில் தாமதம்வேண்டாம். 26.8.2016 முதல் 18.9.2016 வரை உங்களின் தன-சப்தமாதிபதியான சுக்ரன் 6ல் சென்று மறைவதால்வாகன விபத்து, வழக்கால் நெருக்கடிகள், மனைவிக்கு கர்ப்பப்பை வலி வந்து நீங்கும். இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு5ம் வீட்டிலேயே அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போவதுநல்லது. சில சமயங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். கோபப்படாதீர்கள். அவர்களின் திருமணம், உயர்கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்தை சரியாக பராமரிக்க முடியாமல் போகும்.

கூடாப்பழக்கமுள்ளவர்களுடன் எந்த நட்பும்வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவதுநல்லது. ஆனால், கேது இந்தாண்டு முழுக்க லாப ஸ்தானத்திலேயே நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.கோவயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். புதுப் பதவிக்கு உங்களதுபெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமாநிலத்தவர்கள், மாற்று மதத்தவர்களால் திடீர்திருப்பம் உண்டாகும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும்பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

வியாபாரத்தில் 
கடினமாக உழைத்து ஒரளவுலாபம் பெறுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.வெளிமாநிலத்தை சார்ந்தவர்களை வேலைக்கு வைக்கும் போது கவனமாக இருங்கள்.பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இருப்பதை வைத்து சம்பாதிக்கப் பாருங்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். பங்குதாரர்கள் உங்களது கருத்துக்களை முதலில்மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள்.கமிஷன், கட்டிட உதிரி பாகங்கள்,கடல் வாழ் உயிரினம், பெட்ரோகெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஆனி, புரட்டாசி, தை,மாசி மாதங்களில் பிரபலங்கள், நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.மூத்த அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெறவேண்டி வரும். சக ஊழியர்கள்கூட சில நேரங்களில் சாதகமாகவும்,பல நேரங்களில் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வார்கள். புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. அதிகசம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடிவரும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல்கசந்து இனிக்கும். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்ப வேண்டாம். இரவில்அதிக நேரம் கண் விழித்திருக்கவேண்டாம். கண்ணிற்கு கீழ் கருவளையம்,மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில்வலி வந்து போகும். திருமணம் நிச்சயமாகும்.

மாணவ-மாணவிகளே! மொழித் திறனை வளர்த்துக்கொள்வீர்கள். வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில்கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்களால் முன்னேற்றம்உண்டாகும். கலை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! 
தொகுதி மக்களை மறக்காதீர்கள்.உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராகசெயல்படுபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

கலைத்துறையினரே! போட்டிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பளவிஷயத்தில் கறாராக இருங்கள். திரையிடப்படாமல்முடங்கிக் கிடந்த உங்களுடைய படைப்புகள்வெளியாகும்.

விவசாயிகளே! விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்றுகவலைப்படுவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். இந்த துர்முகி வருடம்வளைந்து கொடுத்துப் போவதன் மூலமாகவும், சகிப்புத்தன்மையாலும் உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுவதாக அமையும்.

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ் வரரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.


Tuesday, September 1, 2015

Tamil Puthandu Rasi Palan 2015 Overview (Tamil)


பொதுப்பலன்

ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் 14.04.2015 செவ்வாய்க்கிழமை மதியம் மணி 1.42-க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக லக்னம் 8-ம் பாதத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்னி ராசியில், சுபம் நாம யோகம் பத்தரை நாம கரணத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் நான்காம் சாமத்தில் மயில் ஊண் கொள்ளும் நேரத்தில் செவ்வாய் மகா தசையில், சனி புக்தியில், சுக்கிரன் அந்தரத்தில், அங்காரகன் ஓரையில் பிறக்கிறது.

மன்மத வருடத்தின் பலன் வெண்பா:

மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே- மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.
சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி மன்மத ஆண்டில் நன்கு மழை பொழியும். மரம், செடி, கொடி, பறவை, விலங்குகள் பெருகும். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லது நடக்கும். பலவகை தானியங்களும் நன்கு விளையும். நாடாளுபவர்கள் போர் குணம் கொண்டிருப்பார்கள். உலகின் ஒரு பகுதியில் சண்டை மூளும். தெற்கு திசையில் இருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்று வீசும். அரிதான மூலிகைச் செடிகள் அழியும்.
உங்கள் ராசிக்கு 2015 புத்தாண்டு ராசிபலன் அறிவதுர்க்கு கீழே உள்ள ராசியை கலிக் செய்யவும்:

Tuesday, April 14, 2015

Nakshatra rasi palan 2015 in Tamil panchangam




27 Nakshatra rasi palan 2015 in Tamil panchangam

Here is the astrology prediction for 27 nakshatra rasi palan 2015 in tamil panchangam.
Ashwini nakshatra horoscope 2015:
The year is very good for the people under this nakshtra. Chances of high promotion in career are predicted. You may get new business or job opportunity. Financial status will be high. Marital life will be cheerful.
bharani nakshatra horoscope 2015: click for more