Sunday, April 17, 2016

Puthandu Rasi Palan Tamil New Year 2016 – Dhurmugi Varusham


Puthandu Rasi Palan Tamil New Year 2016 – Dhurmugi Varusham

Puthandu (Tamil New Year) as per Mythology

Significance of the Puthandu or Tamil New Year, as per Mythology, is – it is believed that on this day Lord Brahma started the creation of the world. Also, it is considered that the day should be started with making a financial transaction, as it is considered to bring prosperity and happiness in the family. The first transaction is named Kai-Vishesham. This great day is celebrated with equal fervor and quest in the neighbouring country Sri Lanka.
It is a public holiday there. It is celebrated in the same way as in India. Farmers first plough their field this day as it is considered to bring good luck for harvest.
The first day of the year is also the perfect time to bury the past mistakes and begin a fresh. The perfect way of celebrating the Puthandu is to leave the baggage of past behind and begin as if we are born on the day of New Year. This is God’s way of telling us that it is never too late make a new beginning. Let Puthandu or the Tamil New Year be that new beginning.
We hope that this New Year ends all your troubles and it is indeed beautiful for you and your family. We wish all the readers a very happy and prosperous Tamil New Year 2016.

Click on a rasi below to view detailed Puthandu Palangal for each rasi in English:

PUTHANDU RASI PALAN – DHURMUGI  VARUSHAM 2016-2017 – INTRODUCTION

This coming Tamil new year or Puthandu is called Durmugi  varusham, it starts on 13th April 2016 at 6.30 pm on Wednesday . It starts at Thula Lagnam  and in Mithuna Rasi  in a Siddha Yoga day. During this New Year, Jupiter transits on 11th August 2016 in Kanni Rasi. Rahu-Ketu transits in Simma Rasi and in  Kumba Rasi.
The forecast for the Rasis for this Tamil new year will give positive predictions and also things to watch out for, according to the movements of planets. To minimize the negative impact of unfavorable transits of the planets, you can visit the famous temples/Sthalas of the planets and worship the Lord of these planets there, performing the prescribed ’pariharam’ as prescribed in the temples.  Some of the temples are detailed below:
Jupiter/Guru– Alangudi, near Kumbakonam of Thanjavur District;
Saturn/Sani – Thirunallaru of Nagappattinam District;
Rahu – Thirunageswaram which is near Kumbakonam of Thanjavur District;
Ketu – Kilperumpallam,near Myiladuthurai.
Perform the ‘Parihara’ Pujas for getting reducing the unfavorable effects to a great extent and to improve the positivity in your life during this coming year.
13-1460516056-rasipaland-600
Click on a rasi below to view detailed Puthandu Palangal for each rasi in English:

Wednesday, April 13, 2016

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2016-2017




தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2016-2017

துர்முகி புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எத்தகைய பலன்களைக் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோஅசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும்.



ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போஅனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கு 2016 புத்தாண்டு ராசிபலன் அறிவதுர்க்கு கீழே உள்ள ராசியை கலிக் செய்யவும்:


Allso Read



தமிழ் புத்தாண்டு மீனம் ராசி பலன்கள் 2016



தமிழ் புத்தாண்டு மீனம் ராசி பலன்கள் 2016

மந்திரியே எதிர்த்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். காசுபணம் தான் குறிக்கோள் என்றில்லாமல் வாழ்க்கையை காதலிப்பீர்கள். இந்த துர்முகி வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நனவாகும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பது, அறைக் கட்டுவது, வீட்டிற்கு வர்ணம் பூசுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று சிலர் நகரத்தில் வீடு வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.

இந்தாண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரச்னைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புது பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மழலை பாக்யம் கிடைக்கும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பர். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரானவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். 

அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமொழி, மதம், அண்டைமாநிலத்தவர்களால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும். என்றாலும் கேது ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். 1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். 

வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. வீண் பழிகள் வரக்கூடும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். ஆனால் 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். 

ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 8ல் அமர்வதால் தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். எல்லோருக்கும் எல்லா வகையில் உதவியும் நம்மை ஏன் குறைக் கூறுகிறார்கள் என்று அவ்வப்போது புலம்புவீர்கள். வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது. சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. 

இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 9ல் நிற்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுபடுத்துவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். தந்தையாருடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். இந்தப் புத்தாண்டு செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். 

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சிலர் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாட்ஜிங்,ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார். 

வைகாசி, ஆவணி, தை, மார்கழி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சந்தையில் மதிப்புக் கூடும். 2.8.2016 முதல் உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் பாராட்டிப் பேசப்படும். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். 

கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சேருவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள். 

மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். அறிவாற்றல், நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். தொகுதி மக்களிடையே செல்வாக்கு உயரும். இளைஞர்களின் ஆதரவு பெருகும்.

கலைத்துறையினரே! 
புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். 

விவசாயிகளே! மகசூல் பெருகும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வருமானம் உயரும். வீட்டில் விசேஷங்களெல்லாம் நடந்தேறும். இந்த துர்முகி ஆண்டு துவண்டுக் கிடந்த உங்களுக்கு புதிய பாதையை அமைத்துத் தருவதுடன் புகழ்பட வாழ வைக்கும்.

பரிகாரம்: திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த குழந்தைக்கு உதவுங்கள். 

Also Read




தமிழ் புத்தாண்டு கும்பம் ராசி பலன்கள் 2016



தமிழ் புத்தாண்டு கும்பம் ராசி பலன்கள் 2016

எல்லா சம்பவங்களுக்கும் ஒரு காரண, காரியம் இருக்கும் என்பதை உணரும் நீங்கள், யாரிடமும் உதவி கேட்க தயங்குவீர்கள். அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட நீங்கள், அதை அடுத்தவர்களுக்காக மட்டும் பயன்படுத்துவீர்கள். இந்தப் புத்தாண்டு உங்களின் 5ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வரன் தேடித் தேடி அலுத்துப் போன உங்களின் மகளுக்கு இந்தாண்டு கல்யாணம் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். தூரத்து சொந்தம் தேடி வரும். பூர்வீக சொத்தை சீர்த்திருத்தம் செய்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். 

தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் இடத்திலேயே தொடர்வதால் உங்களின் கடின உழைப்பிற்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். துர்முகி வருடம் பிறக்கும் நேரத்தில் செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்று 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது வேலை கிடைக்கும். 1.8.2016 வரை குருபகவான் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு ராசிக்கு 8ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். 

தன்னம்பிக்கை குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். பெயர், புகழ், கௌரவம் குறைந்து விடுமோ என்ற ஒரு பயம் வரும். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 9ல் அமர்வதால் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மிகவாதிகளின் ஆசி பெறுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதா மாதம் லோன் வாங்கி பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம். 

அதற்கான வழிவகைகள் பிறக்கும். வருடப் பிறப்பு முதல் இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7ம் இடத்திலேயே ராகு தொடர்வதால் வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை வந்து போகும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். கேதுவும் இந்தாண்டு முழுக்க உங்கள் ஜென்ம ராசியிலேயே ஆரோக்யம் பாதிக்கும். 

அலுப்பு, சலிப்பு, ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, அல்சர், அலர்ஜி, காய்ச்சல், கெட்ட கனவுகளெல்லாம் வந்து செல்லும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது. ஹார்மோன் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள்.

வியாபாரத்தில்
 போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப் படுவீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். 

உத்யோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் ஒரு அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துச் செல்லும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடி பெற வேண்டி வரும். சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். 

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வயிற்று வலி, முடி உதிர்தல் வந்து போகும். பள்ளிக் கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 

மாணவ-மாணவிகளே! 
டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
அரசியல்வாதிகளே! 
கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். தகுந்த ஆதாரமின்றி எதிர்க் கட்சியினரை தாக்கி பேச வேண்டாம். 
 
கலைத்துறையினரே! பரபரப்பாக காணப்படுவீர்கள். சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் கடந்து பெரிய வாய்ப்புகளும் வரும்.

விவசாயிகளே! 
வாய்க்கால், வரப்புச் சண்டையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். கோட்டு, கேஸ் என்றெல்லாம் அதிகம் செலவு செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். எண்ணெய் வித்துகள், துவரை, உளுந்து பயறு வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு உடல் நலக் குறைவையும், நெருக்கடிகளையும் தந்தாலும் சமயோஜித புத்தியால் முன்னேற வைக்கும்.

பரிகாரம்: வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். சாலைத் தொழிலாளிகளுக்கு இயன்றளவு உதவுங்கள்.

Also Read



தமிழ் புத்தாண்டு மகரம் ராசி பலன்கள் 2016



ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்கும் நீங்கள், எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்கள். அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை கழிக்காமல் உழைப்பால் உயர்பவர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். சுறுசுறுப்பாக பல வேலைகள் செய்து முடிப்பீர்கள். இந்த துர்முகி வருடம் உங்களுக்கு 6வது ராசியில் பிறப்பதால் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பயணங்களும், செலவுகளும் உங்களை துரத்தும். சிலருக்கு வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 

பழைய வாகனம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். இந்தாண்டு முழுக்க ராகு 8லும், கேது 2ம் இடத்திலும் நீடிப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். இடமாற்றமும் இருக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். 

வறட்டு கவுரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இந்த துர்முகி வருடம் முழுவதுமாக உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். வருமானம் உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். வீட்டில் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்-மனைவி இருவரும் கலந்துப் பேசி குடும்பச் செலவுகளை குறைக்க முடிவுகளெடுப்பீர்கள். குழந்தை இல்லாமல் கோயில், குளமென்றும் சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். 

கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். 1.8.2016 வரை குருபகவான் 8ல் மறைந்திருப்பதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பல வருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். ஆனால், 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். 

வீண் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். திடீர் பணவரவு, யோகம் எல்லாம் உண்டாகும். உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். வளைந்துக் கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். அடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்வதால் வளைந்து கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுவீர்கள். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. 

வியாபாரத்தில் 
சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப்பாருங்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள்.தொலைக்காட்சிவானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். மூலிகை, கட்டிட உதிரி பாகங்கள், துணி, புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துப் போங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். 

உத்யோகத்தில் 
உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் இழந்த சலுகைகளையும், மதிப்பு, மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறுயிடத்திற்கு மாற்றப்படுவார். 

கன்னிப் பெண்களே! காதல் தோல்வியில் கலங்கி நின்றீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்று மொழிக்காரர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள். 

மாணவ-மாணவிகளே! போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அரசியல்வாதிகளே!
 பொதுக் கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள். 

கலைத்துறையினரே! 
சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்தகலைஞர்களால் உதவிகள் உண்டு. 

விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரருடன் பாந்தமாக பழகுங்கள். வரப்புச் சண்டைகள் வேண்டாம். அதிக வட்டிக்கு புதிதாக கடன் வாங்கி பழைய கடனை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். பழுதான பம்பு செட்டை மாற்றிவிட்டு புதுசு வாங்குவீர்கள். இந்த துர்முகி வருடம் சின்னச் சின்ன ஏற்றத் தாழ்வுகளை தந்தாலும் உங்களின் வளர்ச்சிப் பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதாக அமையும். 

பரிகாரம்: 
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சுவாமிமலை முருகனை தரிசியுங்கள். வயதானவர்களுக்கு செருப்பும் குடையும் வாங்கிக் கொடுங்கள் 

Also Read