Wednesday, April 13, 2016

புத்தாண்டு ராசிபலன்கள் 2016 துர்முகி



துர்முகி புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எத்தகைய பலன்களைக் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்

 ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோஅசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும். ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போஅனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

 மேஷம்: இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மேஷம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே எதிலும் துணிச்சலும் தான் நினைத்த காரியம் சாதிக்கின்ற எண்ணமும் தான் நினைக்கும் எண்ணப்படி பிறர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே தாங்கள் பிறருக்கும் அவர்கள் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுத்து பிறரை அலட்சியமாக எண்ணாமல் உதசீன படுத்தாமல் முன்கோபம் இன்றி சலிப்புகளைப் பிறரிடத்தில் காட்டாமல் அவரசத்தை நீக்கி நிதானத்தை கடைபிடிக்க மற்றவர்களையும் அவர்கள் சொற்களையும் எடுத்தெரியும் எண்ணங்களை மாற்றி பொறுமையை கையாண்டால் தாங்கள் வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இந்த ஆண்டில் உங்களுக்கோ உங்கள் குடும்ப உறுப்பினருக்கோ வைத்தியச் செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும் வருமானம் வருவதில் சில இடையூறுகள் இருந்தாலும் அதை சமாளித்து தொடர் லாபம் பெறுவீர்கள் வேலையில் மாற்றம் உயர் பதவி குறித்த சிந்தனைகளை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். திரைகடல் ஓடி திரவியம் தேடும் மேஷ ராசிக்காரர்கள் அந்நிய செலாவணி மூலம் வலுவான லாபம் பெறுவீர்கள். வெளிநாடு உங்களை வாழ வைத்தது என்று எண்ணும் அளவிற்க்கு தொடர் விமானப் பயணம் உண்டு. வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது அடகுக்கடை நடத்துவது போன்ற தொழிலில் நீண்ட காலத் தொடர்பு உள்ளவர்கள் ஒன்றிரண்டு பேரிடம் ஏமாந்தாலும் அந்த தொழில் விட்டு வெளிவர மாட்டீர்கள் இந்த தொழிலில் இது சகஜம் தான் என்று லாபாம் பார்த்து பழகியதால் தொடர்வீர்கள். அரசாங்க உத்தியோகம் பர்க்கும் சிலர் சைடு பிசினசாக உபதொழில் செய்து சம்பாதீப்பீர்கள் விவசாயத்தில் இவ்வளவு காலமும் பெரிதாக அக்கரை காட்டாமலிருந்த சிலர் தொடர்மழை காரணமாக இந்த ஆண்டு ஆர்வத்துடன் பயிர்களை சாகுபடி செய்வீர்கள் ஓரளவு நல்ல விலை கிடைக்கும். சுறுசுறுப்பு மிகுந்த நீங்கள் சும்மா இருக்க மாட்டீர்கள் உற்சாகம் பெருக ஓயாத உழைப்பு எப்போதும் அயராத அலைச்சல் உறவுகளின் விஷேசங்களில் கலந்து கொள்ளுதல் ஒவ்வொரு நாளும் கண்விழித்ததும் இன்றைக்கு வருமானம் வரும் வழி குறித்து ஆராய்தல் நேரத்தை மிச்சம் பிடித்து தன் உயர்வுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற சிந்தனை வீண்பொழுது வெட்டிப் பேச்சுங்குற வேலைக்கே இடம் இல்லைங்கிற அளவிற்கு சுய தேடலில் அதிக விருப்பம் கொள்வீர்கள். ஊரும் உறவும் புகழ புதிதாக வீட்டைக் கட்டி முடிப்பீர்கள் உங்களின் கனவு நிறைவேறும் குருவிக்கு கூடு குடும்பத்திற்கு வீடு இன்றைய அவசிய தேவையாகிவிட்டது எப்பாடுபட்டாவது இந்த ஆண்டில் பால்காய்ச்சி புதுமனைப் புகுவிழா நடத்திடுவீர்கள். அதேபோல் பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென்கிற உறுதியும் உங்களுக்கு உண்டாகும் சில தடைகளிலுருந்தாலும் அதை சாதுரியமாக சமாளித்து சாதிப்பீர்கள். தினந்தோறும் ஸ்ரீவிநயகப் பெருமானையும் ஸ்ரீ ஆஞ்சனேய பெருமாளையும் வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும் 

ரிஷபம்: 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும்ரிஷபம் ராசிஅன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். பேச்சில் நளினம் பெண்கள் போன்ற இனிய சுபாவம் தன் காரியத்தை பிறரைக் கொண்டு சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் நுட்பமாக பேசும் வல்லவர்களே சிறிது நப்பாசையுடன் சில காரியங்களில் இறங்கி சாதிக்கும் வேளையில் தனக்கு இடர்வரும் என்று தெருந்தவுடன் தான் தப்பித்துக் கொள்ளும் திறன் படைத்தவர்களே பயந்த சுபாவம் மிக்க நீங்கள் தங்கள் தந்திரத்தால் தன் பகையை முடிக்கும் திறமை கொண்டவர்களே., கடந்த காலம் உங்களை கசக்கி எறிந்துவிட்டதென்று நினைத்து வருத்தப்படாமல் நிகழ்கால நிச்சய வெற்றிக்காக உழைப்பீர்கள் உங்களின் வருமானம் சக்தி என்னவென்று தெரியாமல் அகலக்கால வைத்து அதிக கடன் தொந்தரவுகளில் மாட்டிக் கொண்டீர்கள் அதிலிருந்து மீள அதிக உழைப்பு தேவைப்படும் சமாளித்துவிடலாம் என்று நீங்கள் போட்ட திட்டங்கள் உங்களை விழிபிதுங்க யோசிக்க வைத்திருக்கும். நல்ல வருமானம் வரும் கவலை படாதீர்கள் நீங்கள் தொட்டதெல்லம் துலங்கும் வச்சதெல்லாம் விளங்குமென்று உங்களை யாரோ உசுப்பேற்றிவிட்டிருப்பார்கள் அதை நம்பி ஏகப்பட்ட கடனை வாங்கி தொழிலை விரிவுபடுத்தி மாட்டிக் கொண்டது தனி அனுபவமாக இருக்கும். இதிலிருந்து எப்படி மீள்வதென்று பலவாறு குழம்பி யோசிப்பீர்கள் கைமீறிப் போய்விட்டது காலம் கடந்த சிந்தனை காரியத்துக்கு உதவுமா இனி என்ன செய்வது ஒருவருக்கு யோகதசை நடந்தால் அந்த தசை முழுவதும் நன்றாகவே இருக்குமா என சிலர் இப்படித்தான் ஏமாந்துவிடுகிறார்கள் நன்றாக வருமானம் வரும்போது அதிக கடன் வாங்கிவிட்டால் கடனை திருப்பிக் கொடுக்க நினைக்கும் சமயத்தில் வருமானம் நின்று பொய்விடும் தொண்டையில் முள்காட்டி கொண்டது போல் அவஸ்தைப்பட வைத்துவிடும். சிலருக்கு குடும்பத்துக்குள் குழப்பம் சண்டை கணவன் மனைவி விரோதம் தலைவிரித்தாடும் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுக்கும் பொறுப்புமிக்க குடும்பத் தலைவரான நீங்கள் இபோது அவசரப்பட்டு பிள்ளைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். சிலர் துன்பங்களைத் துடைத்துப் போட்டுவிட்டு பழசையெல்லாம் மறந்துவிட்டு இந்த புத்தாண்டில் எப்படி சாதிப்பது என்பதை மட்டும் யோசிப்பீர்கள் நல்ல விஷயங்களுக்கு கடன் வாங்கினாலும் பரவாயில்லையென்று துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தில் சுபகாரியங்கள் சுக அனுபவங்களைத் தரும் உள் மனதில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடிய கற்பனைகளை நிஜத்தில் அனுபவிப்பது ஒரு தனி சுகமாக இருக்கும். மௌனமாய் ஊமையாய் நீங்கள் மட்டுமே ரசித்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த ஆண்டு சாதகமாக அமையும். எத்தனை காலம் வெளியே சொல்லமுடியாமல் காய்ந்து போயிருந்த நினைவுகள் ஈரம் இழையோட இதமான இன்பம் தரும். யாரிடமும் சொல்ல முடியாது மறந்து போன கனவுகள் இப்போது ஞாபகத்திற்க்கு வரும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நீங்கள் மட்டுமே அனுபவிப்பீர்கள் எவ்வளவு படிப்பு படித்திருந்தாலும் நெருக்கமான உறவுகளிடம் சொல்லி கேட்க முடியாத ஒன்று இந்த ஆண்டு நிறைவேறுவது பெரிய தவத்திற்குக் கிடைத்த பரிசாக இருக்கும். தினந்தோறும் வீட்டில் மாலை வேளையில் ஐந்து முக குத்துவிளக்கில் பசும் நெய் விட்டு விளக்கேற்றி ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்ய இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 

மிதுனம் 

: இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மிதுனம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். இரட்டை சிந்தனை உள்ள மிதுன ராசி அன்பர்களே உங்கள் காரியங்களை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள பலவகையான யோசனைகளையும் தந்திரங்களையும் கையாள்வதில் சாமர்த்தியம் உள்ளவர்களே வார்த்தைகளால் பிறரிடத்தில் தன் மதிப்பை காட்டிக் கொள்பவர்களே கள்ளத்தனமும் போலி ஆடம்பரமின்றி நடந்து கொள்ளும் 
மிதுன ராசி அன்பர்களே, ஆற்றல் மிக்க அனுபவசாலிகளான மிதுன ராசிக்காரர்களான உங்களுக்கு உள்ளூர ஒருவித பயம் இருந்து கொண்டேயிருக்கும். வெளியே வீரமாகப் பேசினாலும் பொருளாதார நிலையில் விழுந்துவிடுவோமோ என்னும் அச்சம் ஒரு பக்கமமில்லாமல் இருக்காது கிரகங்கள் பலவீனத்தால் கீழே விழுந்துவிட்டால் எழுவது எளிதான விஷயமில்லேயே! கோச்சார கிரகங்கள் சாதகமில்லாத இந்த நேரத்தில் புத்தாண்டு எப்படி இருக்குமோ என்ற கேள்வி இருக்கத்தானே செய்யும். நடக்குதோ நடக்கவில்லையோ கிடைக்குமோ கிடைக்கவில்லையோ முயற்சியைக் கைவிடக்கூடாதென்று மட்டும் உறுதி கொள்வீர்கள் போராட்டம் மிகுந்த இந்த காலகட்டத்தில் போட்டியும் பொறாமையும் நிறைந்து காணப்படும் நேரத்தில் பொல்லாத உறவுப்பகையில், பொறுத்துக் கொள்ளாத மனைவி மக்களுடன் எல்லாவற்றுக்கும் பொறுமைதான் முதல் முதலீடு உங்கள் கோபத்தையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குழிதோண்டி புதைத்துவிட்டீர்கள் அதனால் கெட்ட பெயர் குறைந்தது உங்களின் பழைய முகம் பலருக்கும் ஞாபகமிருப்பதால் ஒருவித பயம் கலந்த மரியாதை எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த புதிய கிளை தொடங்குவீர்கள் நிலம் நிலம் வாங்கிபோட்ட இடத்தில் வீட்டைக் கட்டுவீர்கள் கிராமத்தில் விவசாயத்திலும் கவனம் செலுத்த ஆட்கள் நியமிப்பீர்கள் வேலையில் பதவி உயர்வுக்கும் முயற்சி செய்வீர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், நிதி, நிர்வாகம் என எந்த துறையில் ஈடுபட்டிருந்தாலும் அதை முழுமையாக்க கல்வியில் முழுக்கவனம் செலுத்துவீர்கள். எதிர்கால சிந்தனைகள் உங்களுக்கொரு பயத்தை ஏற்படுத்தியிருப்பதால் பொருப்பு கூடுதலாகி செய்கிற வேலையில் கவனம் செலுத்துவீர்கள். வெட்டியாக சுற்றிக்கொண்டும் நண்பர்களிடம் அரட்டை அடித்து வெட்டிப் பொழுது போக்குவதை நிறுத்திக் கொள்வீர்கள் நல்ல குணங்கள் உங்களை வந்தடைய ஆரம்பித்துவிட்டதால் செல்வாக்கும் சொல்வாக்கும் தானாக வரும் ஏற்றத்தை தரும். மாற்றங்கள் இருபதாக இருந்தாலும் அறுபதாக இருந்தாலும் வந்து சேரும் கசப்பு மாறி இனிக்கும் ஆண்டாக இருக்கும். புதன் கிழமை தோறும் புதன் ஹோரையில் ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கும் ஸ்ரீமகாலட்சுமிக்கும் அர்ச்சித்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும்.

 கடகம் : 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கடகம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். தான், தனது, தனக்கென்று ஓர் கொள்கை பிடிவாத குணமும் சாமர்த்தியமும் தைரியமும் உள்ளவர்களே எவர் எது சொன்னாலும் அதை ஆராய்ந்து பலரிடத்தில் கேட்டு விபரம் தெரிந்து கொண்டாலும் முடிவில் தன் எண்ணப்படி நடப்பவர்களே... எளிதில் எதையும் நம்பாதவர்களே... பிறர் தனது ஆணைக்குள் இருக்க விரும்புபவர்களே... தன் காரியத்தை சாதித்துக் கொள்ளும் வல்லமை கொண்டவர்களே... பிறரை எடைபோட்டு ஆய்பவரே தனம் படைத்தவர்களோடு பழகுபவர்கள் உயர் பொருள் ஒன்றிருக்க அதனினும் மேலான பொருளை தேடி செல்பவர்களே தன்னலம் கொண்ட கடக ராசி அன்பர்களே! கோட்சார கிரகங்கள் ஓரளவுக்கு சாதகமாக இருபதனால் நன்மைகள் நடப்பதில் குறை ஒன்றும் இருக்காது வாய்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உங்களுக்கு நல்ல செய்திகள் கிட்டும் வெறுப்புகள் விலகி விருப்பங்கள் பூர்த்தியாகும். போட்ட முதலுக்கு ஏற்ற லாபங்கள் இல்லாமல் இருக்காது கூடுதல்-குறைவென்கிற வித்தியாசங்கள் இருந்தாலும் நஷ்டம் வர வாய்ப்பில்லை. அதிகப்படியான செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் சிலர் வருவாய் வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிலர் திடீர் நன்மைகள் அடைவீர்கள் கடன் நெருக்கடிகள் குறையும் கடல் கடந்து செல்வோருக்கு வருமானம் பெருகும் விவசாயிகள் நன்மை அடைவார்கள் மீன்பிடி தொழில் செய்வோர் எச்சரியாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் முரட்டுத் துணிச்சல் சாதகமாக இருக்காது சமயத்தில் பாதிப்பையும் ஏற்படுத்து விடுமென்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். எப்படியிருந்தாலும் விழிப்புணர்வு உள்ள நண்டு ராசிக்காரர்களான நீங்கள் பயத்துடன் கூடிய எச்சரிக்கை உணர்வு உள்ளவர்களாவீர்கள் இருப்பினும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க தன் கால்களை மடக்கிக் கொண்டு வளைக்குள் போய்விட்டாலும் இரைதேடும் ஆசையில் அவசரப்பட்டு வெளியே வந்து மாட்டிக் கொள்வது போல் ஏதேனும் சிக்கல்களை இழுத்துக் கொள்ள நேரிடும். விழுவதும் எழுவதும் மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒன்றுதான் அதற்காக சோர்ந்து விட வேண்டாம். இந்த புத்தாண்டு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒன்றும் குறைவைக்கவில்லை உங்களால் முடிந்தவரை வழிகாட்டியுள்ளீர்கள் இன்னும் இருக்கும் காலம் வரை சாதிக்கவே எண்ணுவீர்கள். திங்கள் கிழமை தோறும் ஸ்ரீமுருகப்பெருமான் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம், கந்தகுருகவசம் பாராயணம் செய்யவும். இந்த ஆண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 

சிம்மம் :

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் சிம்மம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். காட்டுக்கு அரசன் சிங்கம் போல் ராசி மண்டலத்திலேயே மேலான நிலையை கொண்டிருக்கும் சிம்ம ராசி அன்பர்களே தனக்கென்ற தனிப்பாதை பிறர் தன்னை தான் வணங்க வேண்டும் என்ற எண்னம் கொண்டவர்களே, தனக்கென்ற தனிப்பாதை பிறர் தன்னை வணங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே... வீண் கர்வம், முரட்டு பிடிவாதம் கொண்டவர்களே, வாக்கு சாதுரியம், மனோபலம், தன்னை எதிர்க்கும் எதிரிகளை தக்க சமயத்தில் அவர்களை வெற்றி கொள்பவர்களே, தான் என்ற மமதை, அகம்பாவம், பிறரை அடக்கி ஆளும் அதிகார போக்கு, அலட்சிய சுபாவம், அனைத்தும் தெரிந்தவர் போல் காட்டி கொள்பவர்களே, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல் வரட்டு பிடிவாதம் கொண்டவர்களே தன்னை பிறர் போற்ற வேண்டும் என்ற எண்ணம், பிறர் முகஸ்துதிக்கு ஆளாகி அவர்கள் பேச்சால் ஏமாற்றம் அடைபவர்களே எவரையும் நம்பாமல் தான் என்ற அகம்பாவத்தால் கஷ்ட நஷ்டத்தை தேடி கொள்பவர்களே ஆற்றல் மிக்கவர்களாக இருந்தும் ஆத்திரத்தால் நிதானத்தை இழக்கும் சிம்ம ராசி அன்பர்களே! கோட்சார கிரகங்களால் சில நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ஓங்கி அடித்த கிரகங்கள் இனி் தாங்கி அடிப்பார்கள் துன்பத்தின் வலிமையான முழுவீரியம் குறையுமென்று நம்பலாம் எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை கிட்டும் கடன் இல்லையென்று கைவிரித்தவர்கள் கொஞ்சம் தர சம்மதிப்பார்கள். திருமணத்தடை விலகும், கல்யாணம் கூடிவந்து களிப்படைய வைக்கும். விவசாயம் பெருகும் விளைச்சல் அதிகரிக்கும் பணப்பயிர்கள் ஆதாயம் தரும், தங்க நகை சேர்க்க தகுந்த நேரம் இதுவாகும். கடன் குறையும் அரசியலில் செல்வாக்கு பெருகும் ஆளுமைத்திறன் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு உண்டாகும், வெளிநாடு செல்வீர்கள், குடும்பத்தரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் இடையூறுகள் விலகும் பலவீனங்கள் மறைந்து போகும் பலம் அதிகரிக்கும், எதிரிகள் அடங்கி போவார்கள், விட்டுப் போனவர்கள் விலகியவர்கள் தானே தேடி வருவார்கள், எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். சில சமயம் குழப்பம் உண்டானாலும் மனத்துணிவுடன் எதையும் சமாளிப்பீர்கள். எல்லாமே உங்களுக்கு சாதகமாக அமையவிருக்கும் புத்தாண்டாகும் இது. சனிக்கிழமை தோறும் ஸ்ரீபூவராகபெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி மலர்களால் அர்சித்து வழிபட அனைத்தும் நன்மையாகும்.

 கன்னி: 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கன்னி ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். இனிய தோற்ற பொலிவும் இனிய சுபாவமும் கலகலப்பும் பெண் சாயல் கொண்டவர்களான நீங்கள் சிக்கனம் என்ற பெயரில் வரவுக்கு மீறி செலவுகள் செய்வீர்கள். தன் காரியத்தை சாதித்துக் கொள்ள நயந்து செலவின்றி காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வீர்கள். உயர்ந்த மனிதர்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை கொள்ளாத நீங்கள் தான் செய்ய வேண்டிய காரியத்தை பிறரிடத்தில் கொடுத்து சோதித்துப்பார்ப்பீர்கள், சலன புத்தி கொண்ட உங்களின் பேராசை தன்மை அறிந்து கொண்ட சில ஏமாற்றுகாரர்களையும் நம்பும் நீங்கள் நாணயமானவர்களையும் தன் நலனை கருதாது உங்களுக்கு உதவி புரியும் உற்றார் உறவினர்களையும் உற்ற நண்பர்களையும் உறுதுணை செய்பவர்களையும் நம்பாமல் பிறகு நம்பும் கன்னி ராசி அன்பர்களே! புத்தாண்டு புதுப் பொலிவை கொடுக்கும் நினைத்து பார்க்காத காரியங்களை நிறைவேற்றிதும், சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருந்தாலும், சாதாரண விஷயங்கள் பூர்தியாகும். திருமண பருவத்திலிருப்பவர்களுக்கு திருமண யோகம் கூடி வரும் வெளிநாட்டு பயணம் கூடி வரும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பணம் கையிலிருந்தும் வீடுகட்ட முடியாமல் தடை உண்டாகிக் கொண்டே இருக்கும் அதை எப்படியும் இவ்வாண்டு ஆரம்பிபீர்கள். பூமி பூஜை செய்திடுவீர்கள் சிலர் வீடு கட்ட ஆரம்பித்து பணத்தடையால் கட்டுகான வேலைகள் பாதியில் நிற்கும் அதை தொடர்ந்து செய்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம் முதலில் செய்வதா வீடு கட்டுவதா என்ற குழப்பம் வந்துவிடும். சிலருக்கு உள்நாட்டு வேலை வாய்ப்பும் வெளி நாட்டு வேலை வாய்ப்பும் ஒரே நேரத்தில் வந்த கதவைத் தட்டும். கடன் இருக்கிறதென்று சிலர் கலங்கி தவிப்பீர்கள் கடனை குறைக்க மாற்று வழி காண்பீர்கள் புத்தாண்டில் நல்ல செய்தி வரும். சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட கையில் தங்க மாட்டேங்குதேன்னு கவலை இருக்கும் சேமிப்பு வழிகளில் ஏதாவதொன்றைத் தேர்வு செய்து பணம் சேர சபதம் எடுப்பீர்கள். சம்பளம் கைக்கு வருமுன்னே பட்ஜெட் போட்டு செலவு செய்ய சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள இந்த ஆண்டில் தீர்மானம் செய்வீர்கள். வியாழக்கிழமை தோறும் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவ பெருமாளுக்கு நெய் தீபமேற்றி மலர்களால் அர்ச்சித்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

 துலாம்: 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். எதிலும் நியாயம், நேர்மை, நீதி, வாக்கு தவறாமை, எல்லா செயல்களிலும் சீராக நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அன்பர்களே! நீங்கள் உங்கள் பேச்சால் சாதுரியம் செய்வீர்கள். சில சமயங்களில் யோசிக்காமல் பிறர் கூறும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் அவசரத்தால் அபசகுணமாக பேசி விடுவீர்கள். நீதி தேவதையின் கையில் துலாபாரமாக இருந்தாலும் பொருள் வைக்கும் பக்கமே சாய்வீர்கள். சிலரை சீண்டி பேசி வேடிக்கை பார்ப்பீர்கள். சிறிது நேரத்திற்குள்ளேயே குண பேதங்களை மாற்றிக் கொள்பவர்களே சில சமயம் துலாபாரத்தின் முள் போல் சரியான நியாயத்தை பேசுவீர்கள், பிறரை போற்றி பேசி தன் காரியங்களை சாத்திதுக் கொள்பவர்களே மேலான சுறுசுறுப்பும் தெளிவும் கொண்டவர்களே, ஆடம்பர வாழ்க்கையும் கௌரவத்தையும் கௌரவத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள் பிறர் சொல்லில் பொருள் ஆய்ந்து அதற்கு தக்கபடி பதில் அளிப்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அவசர வார்த்தைகளாலேயே வர இருக்கும் நன்மை நண்பர்களின் உதவி காரிய வெற்றி தன் அறியாமையால் நற்பலனை இழக்க நேரும் பிறர் கூறும் கருத்தை கவனமாய் கேட்பது போல் இருந்து பின் தான் நினைத்தபடி நடக்க வேண்டும் என்ற எண்னம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்று ஆறுக்குடைய குரு பகவான் தன்னம்பிக்கையை கூடுதலாக வளர்க்கும் ஆனால் உங்களுக்கு யோக திசை நடக்குமானால் நன்மையான பலன்களும் அவயோக திசையினால் தீமையான பலன்களும் நடக்கும் எது செய்யத் தகுதியுடையதோ அதை வெகு ஜாக்கிரதையுடனும் பலத்துடனும் விருப்பத்துடனும் செய்ய வேண்டும். நாம் நம்முடைய கடமை மீது கொள்ளும் விருப்பத்தை நிறுத்தப் பார்க்கவோ தெய்வ வலிமையில் அதற்குரிய முக்கியத்தை தீர்கானக்கவோ நம்மிடம் எவ்வித அளவுகோலும் இல்லை நம்முடைய கால நேரம் நமக்கு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் அனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வு நமக்குல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் இது பெரிய பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட வழிவகை செய்யும். முன்பின் யோசிக்காமல் சில விஷயங்களில் அவசரப்பட்டு மாட்டிக் கொண்டதால் சில சங்கடமான அனுபவம் கிடைக்க கிடைக்க சுதாரிப்பீர்கள் எந்த ஒரு காரியத்திலும் நிதானம் தேவையென்பதை உணர்வீர்கள் பக்குவப்பட்ட பிறகு பலன் கிடைப்பது உறுதியாகும். இவ்வாண்டு உங்களின் செயல் காரியங்களை நிறைவேற்ற பாடுபடும் நடந்தவை யாவும் நன்மைக்குத்தான் என்ற பட்டறிவு உங்களைப் பதப்படுத்தியதால் யோகங்கள் அதிகரிக்கும் சோகங்கள் மறையும். பிள்ளைகளின் திருமணத்தை பிரமாதமாக நடத்துவீர்கள் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவீர்கள் வீட்டு வலைகளை விரைந்து முடிப்பீர்கள் மனை வாங்கி மகிழ்வீர்கள் சில குடும்பத்தில் விவசாய நிலத்தை வீட்டு மனையாக்க வேண்டுமென்று பிள்லைகள் விரும்புவார்கள் சிற்சில மாற்றங்களுடன் அனைத்து நன்மைகளும் உண்டாகும். சனிக்கிழமை தோறும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யவும்.

 விருச்சிகம்: 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். சகல விஷயங்களிலும் ஆர்வம் காட்டி சுறுசுறுப்போடு சிக்கனமாய் இருக்கும் அன்பர்களே அனாவசிய செலவுகளை நீக்கி அவசிய அத்தியாவசிய செலவுகலை செய்யும் அன்பர்களே, சிலருக்கு ஏழரையிலும் ஏற்றம் எளிதில் வரும் மாற்றம் எங்கிருந்தாலும் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள், பிள்ளைகளின் படிப்பு திருமணம் நல்லவிதமாக அமையும். வேலையில் எதிர்பார்த்த வருமானம் தொழில் வளர்ச்சியும் காணும், அரசியல் செல்வாக்கு ஆதாயம் தரும் அடுத்தவெரென்ன நமக்கு வாய்ப்பு கொடுப்பது நாமே நமக்கு வாய்ப்பை உருவாக்கி கொள்வோமென முடிவு செய்து களத்தில் குதித்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். பலருக்கு வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும் சட்டச் சிகலை சந்தித்து வரும் நீங்கள் அதிலிருந்து விடுபட ஓரளவு நல்ல வழி கிட்டும். ஒப்பந்த வேலைகள் சூடு பிடிக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவிட்டலும் கணிசமான ஆதாயம் தரும். பழைய தொழிலில் மாற்றங்கள் கொண்டு வரவும் உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு குழிபறிப்பதை கண்டும் காணாமலும் இருப்பது போலிருந்து கையும் களவுமாக பிடிப்பீர்கள் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள் மனச்சோர்வின்றி செயல்பட முடிவெடுப்பீர்கள் ஒரே முயற்சியில் உச்சியை அடைய முடியாதென்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருப்பதால் படிப்படியான வளர்ச்சியைப் பெற பாடுபடுவீர்கள். துன்பம் வறுமை ஆகியவற்றை உழைப்பினால் விரட்டலாமென்பது நன்கு தெரிந்த காரணத்தால் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு வழியில் பயணிப்பீர்கள். வீழ்ச்சிகளில் பெரிய வீழ்ச்சி தன்னம்பிக்கையை இழந்துவிடுவது தான் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருபதால் திடமான சிந்தனை தெளிவான முயற்ச்சி உருப்படியான உழைப்பு உள்ளதால் இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். சனிக்கிழமை தோரும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்க்கேற்றி அர்ச்சித்து வழிபாடு செய்ய இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 

தனுசு: 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் தனுசு ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். வைராக்கியம் திட சிந்தனை பொன்மனம் நேர்மை நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே தங்கள் பேச்சால் பிரச்சினைகளை வரவழைத்து கொள்ளும் நீங்கள் விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்கை குறைந்தவர்கள் ஊருக்கு உபகாரத்தை செய்யும் நீங்கள் தன் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் ஆவீர்கள் கல்வி வாக்கு சாதுரியங்கள் கொண்ட நீங்கள் சமயத்தில் உண்மைக்கு புறம்பான வாக்கால் உங்கள் கௌரவத்தை கெடுத்துக்கொள்வீர்கள். ஏழரை சனியின் தடை இருந்து கொண்டு தான் இருக்கிறது அதோடு வேலையில் திடீர் பிரச்சினைகள் இடமாற்றம் குறைந்த சம்பளம் மேலிட தொந்தரவுகள், இருந்த வேலையும் கைவிட வேண்டிய கட்டாயம் திருமணம் அமையாமை என பல்வேறு குளறுபடிகள் கடன் ஒருபக்கம் மருத்துவ செலவுகள் ஒருபக்கம் என் செலவுகள் உண்டாகும். தொழிலில் கிடைக்கும் லாபங்கள் யாவும் முன்னர் பெற்ற அனுபவங்களினால் விளைந்த முத்துக்களாக இருக்கும் வெற்றியென்பது உடனே கிடைத்துவிடும் விஷயமல்ல பல தோல்விகளுக்கு பிறகே அதன் முகத்தைப் பார்க்க முடியும். இந்த ஆண்டு உங்களுக்கு நல்லதும் கெட்டதுமான விஷயங்கள் கலந்தேயிருக்கும் முழு அளவில் நல்ல பலன்களும் முழு அளவில் கெட்ட பலன்களும் இருந்திடாது எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிவரும் எதிரிகளை வீழ்த்தும் பொழுது காயங்கள் ஏற்படாமலிருக்குமா? வீடு கட்டவும் வாங்கவும் திருமணம் முடிவு செய்யவும் குழந்தை பாக்கியம் பெறவும் ஜாமீன் போட்ட சங்கடத்திலிருந்து விடுபடவும் வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும் பங்காளி சொத்து பாகப் பிரிவினையும் வேலை வாய்ப்பு பிரச்சினைகளும் சில சில இடையூறுகளுடன் ஒரு நல்ல முடிவுக்கு வரும் யோகங்களை அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு. வாகனப் பயணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நெரிசல் மிகுந்த இடங்கஆளுக்கு செல்லக் கூடாது உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும் வைத்தியச்செலவுகளைத் தவிர்க்க முடியாது கடன் இருந்து கொண்டுதான் இருக்கும் படிப்படியாகத்தான் விடுபட முடியும் உங்களின் ஆன்மீக பலமும் அயராத முயற்சியும் உழைப்பும் விட்டு விலகிடாத தன்னம்பிக்கையும் உங்களுக்கு நிச்சயம் வெற்றி படிக்கட்டுகளாக இவ்வாண்டு அமையும். சனிக்கிழமை தோறும் மாலைவேளையில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 

மகரம்: 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மகரம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். எதையும் யோசித்து பார்க்கும் திறன் பல வழிகளில் சாமர்த்தியம் காட்டி தன்னிடம் எதுவும் இல்லாதது போல் நடந்து கொள்ளும் குணம் பிறர் கருத்துக்களை ஏற்றுக் கொண்டாலும் தன் எண்ணப்படி காரியம் ஆற்றுபவர்களே பிறர் சொல்லுவதை அல்லது பிறர் தன்னுடைய கருத்தை கேட்டாலும் மற்றவருடைய அபிப்பிராயத்தை தான் கேட்டுக் கொள்வீர்கள் தன்னுடைய அபிப்பிராயத்தை கூற மாட்டீர்கள். எதை கேட்டாளும் ஆம், இல்லை என்று பதில் தர மாட்டீர்கள் அடுத்து என்ன என்று திரும்பி கேட்டும் தன்னை தன் மனதுக்குள்ளேயே சில பிரச்சினைகளை போட்டு போராடி போராடி தானே தனக்கு தீர்வு காண்பீர்கள். உங்களின் ராசி அதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்திலிருப்பதால் வருமானம் அபரிமிதமாக இருக்கும் உழைப்புக்கு ஏற்ற பலன் கண்டிப்பாக கிடைக்கும். துணிச்சல் வைராக்கியம் தன்னம்பிக்கை தீவிரமாகும், சோர்வை விரட்டுவீர்கள், எதையும் கிடைக்கும் வரை விடமாட்டேன் என்கிற வெறி உள்ளத்தில் நங்கூரமிட்டு நிலைத்திருக்கும் கண்டிப்பாக தொழில் வேலையில் புது அணுகுமுறையில் வெற்றி காண்பீர்கள். ராசிக்கு 8ல் ராகு 2ல் கேது இருப்பதால் இடமாற்றம் வெளி விவகாரம் பாகப்பிரிவினை வெளிநாட்டுப் பயணம் தூர தேச வேலை சற்று அலைச்சலுடன் கூடிய ஆதாயம் என பலன்களிருக்கும். மற்ற கிரகங்களின் கோச்சார அமைப்புப்படி இந்த ஆண்டு சாதனை ஆண்டாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் பிரச்சினைகள் குறையும் கடன் நிவர்த்தியாகும். தன்கையே தனக்குதவி யாரையும் எதிர்பார்த்து வாழ்தல் கூட்டாது முடிந்தவரை உழைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட நீங்கள் பெற்றோரையும் உறவினரையும் பிரிந்து வாழ வேண்டிய நிலை வரலாம், மகன் மகளுக்கு திருமணமாகியிருந்தால் பேரன் பேத்தி கொஞ்சும் பாக்கியம் கிடைக்கும் இல்லாவிட்டால் மகன் மகளுக்கு இந்த ஆண்டு திருமணம் ஆகிவிடும். நீங்கள் யாருக்கு உதவி செய்தாலும் அது வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது அதுவே உங்களுக்கென்று ஈடுபட்டால் தடையும் தடுமாற்றமும் தவிர்க்க முடியாமல் போய் எப்படியோ கடுமையாக முயற்சித்து கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். புதன்கிழமை தோறும் ஸ்ரீகிருஷ்ணர் சந்நிதியில் தேங்காய் உடைத்து 2 பாகத்திலும் பசும்நெய் ஊற்றி தீபம் ஏற்றி பச்சரிசியில் வைத்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும்.

கும்பம்: 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கும்பம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். நவகோள்களில் தன் பணியை நீடி வழிவாது செய்யும் அனலோன் மகனான அந்தகனே கும்பராசியின் அதிபராவார். தெய்வீக குணமிக்க கோடியில் ஒருவர் கும்பத்தில் உதிக்கும் ஞானி ஆவார் என்னும் சொல்லுக்கு உரித்தான கும்பராசி அன்பர்களே, தீர்க்கமான கண்கள் காரிய சாதனை தர்ம சிந்தனை சிரித்த முகமும் குழந்தை உள்ளம் நியாய தர்கங்களுக்கு பயந்து நடப்பவரும் பிறர் அன்புக்கு கட்டுப்படும் நீங்கள் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் இருப்பதும் தக்க மரியாதைக்கு உரியவர்களைத் தவிர பிறருக்கு தலை வணங்காமல் இருப்பதும் மனைவி மேல் அன்பு கொண்டவராய் இருப்பீர்கள். அதிகமான கல்வியும் அதிகமான அனுபவங்களை கொண்டவரும் விளம்பர ஆடம்பரத்தை விரும்பாதவர்களும் சகல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களும் பல கலைகளை பயில்பவரும் சாந்த குணமும் இறைஞான சித்தமும் தெய்வீக அனுக்கிரகமும் கொண்டவர்களும் இளகிய மனம் கொண்டவர்களாகவும் அமைதியும் அடக்கமாகவும் பால்மனம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஒரு சிலர் பிறரை சாடையாக இடித்து பேசி ஒவ்வொருவருடைய குணாதிசயங்களை அறிந்து அவர்கள் இடையில் கலகத்தை மூட்டிவிடும் குணமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். இந்த புத்தாண்டில் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தொழில் மிகவும் சிறப்பாக நடைபெறும். சனி பகவானின் கேந்திர பலம் உங்களை தொழிலில் உச்சத்திற்க்கு கொண்டு செல்லும், தொழிலில் சில கஷ்டங்கள் இருந்தாலும் கண்டிப்பாக நஷ்டம் கிடையாது. சில சமயங்களில் அவசரப்படுதல் முன்கோபம் பிறர் மீது எரிந்து விழுதல் போன்ற ஆகாத குணங்களைத் தவிர்க்க வேண்டும். தற்சமயம் ஏழாமிடத்தில் இருக்கும் குருபகவான் எட்டாமிடத்திற்க்கு இந்த ஆண்டு மாறப்போகிறார் எனவே உடல் நலத்தில் கவனம் தேவை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ நெருங்கிய உறவினர்களுக்கோ வைத்திய செலவுகள் உண்டாகும். பிள்ளைகளுக்கு தக்க படிப்பு படித்து முடித்தவுடன் வேலை, திருமண யோகம் இந்த ஆண்டு அமையும். இவ்வாண்டு ஆரம்பத்தில் மந்தமாகவும் பின் படிப்படியாக வளர்ச்சியும் பெறக்கூடியவர்கள் நெருக்கமான உறவுகளின் ஒத்துழைப்பு கிட்டும். வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிரன் ஹோரையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 

மீனம்: 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மீனம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். மிக மேலான குணம் கொண்டவர்களும் வாசனை திரவியங்கள் மீது விருப்பம் ஒரு சில சமயங்களில் மிக சுறுசுறுப்பாக காரியம் ஆற்றும் நீங்கள் ஒருசிலர் நிதானமாகவும் வேகமின்றி மந்தமாக காரியத்தை செய்ய நீங்கள் இரண்டு விதமான மனோபாவத்தை கொண்டவர்கள். நீங்கள் பல காரியங்களை நேர்த்தியோடு செய்ய நினைப்பீர்கள் மனத் தெளிவும் வாக்கு சாதுரியமும் உண்டு. தன் காரியத்தை சாதித்து கொள்ளும் வேளை மிக நளினமாக பேசி அவர்களை தன் வசம் ஆக்கி காரியங்களை சாதிக்கும் மீன ராசி அன்பர்களே. உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும், இடம் விட்டு இடம் மாறி இருக்க நேரிடும். தனக்கோ தனக்கு நெருக்கமான உறவினருக்கோ வைத்திய செலவுகள் தவிர்க்க முடியாது. கூடுதல் அலைச்சலும் கூடாத நட்பும் குடும்பத்தில் சலசலப்பை உண்டாக்கும். வருமானம் அதிகமாகவும் உண்டாகும். ராசிக்கு லாப விரயாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்திலிருப்பதால் மிகவும் சிரமப்பட்டு பணத்தை சேமிக்க வேண்டியிருக்கும். ராகு ஆறிலும் கேது பன்னிரெண்டிலும் அமர்ந்து வாழ்க்கைக்கு புதுப்பாதை போட்டுக் கொடுக்கும். படிக்கும் வயதில் இருக்கும் ஆண்-பெண்கள் வருமானம் பெறக்கூடிய படிப்பை தேர்வுச் செய்து அதே சமயம் அதிக கோபத்தால் அவசர முடிவெடுத்து பாதிப்பைப் பெறுவார்கள் குடும்பத்தை விட்டு படிப்பு வேலையென்று பிரிந்து போகக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும் சிலருக்கு குடும்பச் சிக்கல்கள் உண்டாகும். சில தவிர்க்க முடியாத இடையூறுகள் வந்து சேரும் எப்படியிருப்பினும் உங்கள் அமைதி பொறுமை நிதானம் கைவிடாது உங்களை காக்கும். இயன்றவரை எல்லாவற்றையும் சரி செய்து வழி நடத்த தயாராவீர்கள் விட்டுக் கொடுத்தாலும் சகிப்புத் தன்மையும் உங்கள் மேம்பட்ட குணமாகவிருப்பதால் எப்படியும் சாதனை நிகழ்த்துவீர்கள். மன்மத வருடம் வரை மனதை குடைந்த சம்பவங்கள் துர்முகி ஆண்டில் துடைக்கப்பட வேண்டுமென்று நினைத்து விட்டீர்கள் என்ன ஆனாலும் சரி இந்த புத்தாண்டில் மாற்றம் வந்தே ஆக வேண்டுமென்று ஒரு முடிவு உங்களிடம் உள்ளது அதற்கான வேலைகளை படிப்படியாக செய்யத் தொடங்குவீர்கள் வெற்றி நிச்சயம். புதன்கிழமை தோறும் ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயாருக்கும் ஸ்ரீவேங்கடேசப்பெருமாளுக்கும் மலர்களால் அர்சித்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

credit: oneindia

Also Read


No comments:

Post a Comment